பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. வெளிநாட்டார் குறிப்புகளில் இராமேஸ்வரம் 1) அல்பருனி (கி.பி. 1030) இவர் பாரசிக நாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர். இவரது வரலாற்றுக் குறிப்புகள் நமது நாட்டின் வரலாற்றிற்குப் பயனுாட்டுவதாக உள்ளன. இராமேஸ்வரம் பற்றி இவர் வரைந்துள்ள குறிப்புகள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன. கிங் அடுத்து உள் ளது உம்மல் நாரா அல்லது இராமேஸ்வர். இந்த ஊர் இலங்கைக்கு எதிர்க்கரையில் உள்ளது. இவைகளுக்கு இடைப்பட்ட கடலின் தொலைவு 13 பர்சங் ஆகும். பஞ்சயவாரிலிருந்து இராமேஸ்வரம் 40 பர்சங் தொலைவிலுள்ளது. இராமேஸ்வரத்திலிருந்து சேது பந்தர் 2 பர்சங் தொலைவிலுள்ளது. சேது பந்தா என்பது கடலில் அமைக்கப்பட்ட அனை என்பது பொருள். தசரதச் சக்கர வர்த்தியின் மகனான இராமன் இந்த அணையை அமைத்தான். நிலப்பரப்பிலிருந்து இலங்கையின் கோட்டையை இணைப்பதற்காக இந்த அணை கட்டப்பட்டது. இப்பொழுது வெவ்வேறான குன்றுகளாக இந்தப் பகுதி காணப்படுகிறது.

  • *

இவைகளுக்கிடையில் கடல் அலைகள் நிறைந்துள்ளன பஞ்சயவார் என்பது தஞ்சாவூராக இருக்கலாம் எனக் agbo, ILG&pgis. (Sachau - Alberui’s India, Vol. 1 PP 208 - 10 quoted by K.A. Neelakandashastri in his forign notices of South India (1972) PP 131-132