பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2| () இராமர் செய்த கோயில் நல்லின கத்தின் சின்னத்தை எந்த அளவிற்கு இன்றைய சந்ததியினர் பேணி வருகின்றனர் அல்லது பேணி வருவார்கள் என எண்ணும்பொழுது நமது உள்ளத்தில் மிகப்பெரிய சூனியம் நிறைகிறது. காரணம் இந்திய நாடு ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை அடைந்த பிறகு இந்தத் திருநாட்டின் மன்னர் க. கிளான மக்களின் மனோபாவத்தில் தமது மூதாதையர்கள் பற்றிய வரலாற்று உணர்வு மங்கி மறைந்து கொண்டே வருவது ஆகும். கங்கை நதித் திரத்தில் அவதரித்த காகுத்தன் கால்நடையாக பன்னிரெண்டு ஆண்டுகள் நடந்து சென்று நமது நாட்டின் தென்கோடியிலான மகேந்திரமலை வரை பல்வேறு பட்ட மொழி. இனம். குலம் ஆகியவகளைக் கொண்ட மக்களின் சிறந்த பிரதிநிதிகளைத் தமது சுற்றமும் கிளையுமாகக் கொண்டு அதர்மத்தை வெற்றி கொள்வதற்கு முயன்று வெற்றி பெற்றான் என்ற இதிகாசம் நமது கருத்திலே கலந்து நின்ற பொழுதிலும் நாம் அந்தத்திக்கிலே இதுவரை ஒரு காலடி கூட எடுத்துவைத்து முன்னேறவில்லை என்பதுதான் நமது உண்மை அனுபவம் ஆகும். இவ்விதம் இதிகாசத்தைப் போற்றிப் பரவும் நாம் அந்த பக்திக் காவியம் வலியுறுத்துகின்ற ஆன்ம நேயம். சகோதரத்துவம், சமய நல்லிணக்கம். தேசிய ஒற்றுமை ஆகியவைகளையும் நாம் இனிமேலாவது நிறைந்த மனதுடனும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையுடனும் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு முயற்சித்தல் வேண்டும் என்பது காலத்தின் கட்டளை ஆகும். இதனை நமக்குத் தெளிவாகவும். நிதரிசனமாகவும் நினைவுறுத்துவது தான் 'இராமேஸ்வரம் திருக்கோயில்” இந்தத் தொகுப்புரையைக் கவனத்துடன் படித்தால் நமக்கு நம்மைப் பற்றி, நமது நாட்டைப் பற்றி, நமது சமுதாயத்தைப் பற்றிப் பல புதிய சிந்தனைகள் தோன்றுவது