பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் |5 வருகிறார். அப்பொழுது அவருக்கு ஏற்பட்டகளைப் புடன் தாகமும் மிகுதியாக இருந்தது. கொண்டுவரப்பட்ட நீரினை அருந்துவதற்கு முன்னர் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிடுகிறது. சிவபிரானை வழிபாடு செய்யாமல் நீரினைப் பருகலாமா? உடனே சிவனை வழிபடுகிறார். சிவபக்தனான இராவணனை வெற்றி கொள்ள அருள்பாலிக்குமாறும். மேலும் சிவபிரான் அந்தக் தலத்தில் உலக நன்மைக்காக நிலைத்திருந்து அருள்பாளிக்க வேண்டுமென்றும். வேண்டுகிறார். ஈசுவரனும் இராமனது கோரிக்கையை ஏற்று லிங்க வடிவில் அங்குப் பிரசன்னமானார். அடுத்து அவரது ஆசிர்வாதத்தினைப் பெற்ற இராமர் கடல் கடந்து இராவணனைப் போரில் வெற்றி பெற்றார். ஆதலால் புனித கங்கை நீரினைக் கொண்டு வந்து இந்த இராமேசுவர லிங்கத்தை வழிபடுவதும் இந்த நூலில் சொல்லப் பட்டுள்ளது. (3) மத்ஸ்சய புராணம் அடுத்து. மத்ஸ்சய புராணத்தில். பாரத நாட்டின் பழம்பெரும் புனித திர்த்தத் தலமாக இராமேஸ்வரம் குறிக்கப் பெற்றுள்ளது. (4) சேதுபுராணம் இராமேஸ்வரம் திருத்தலத்தைப் பற்றி விரிவாகச் சொல்லுகின்ற ஒரே இலக்கியம் சேது புராணம் ஆகும். இந்நூல் கி.பி.15. 16-ம் நூற்றாண்டுகளில் இன்றைய குன்றக்குடியை அடுத்த துளாவூரில் மடாதிபதியாக வாழ்ந்த நிரம்ப அழகிய தேசிகர் என்ற சைவத் துறவியினால் பாடப் பெற்றதாகும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள புராணங்களைப் போன்று இந்த நூ லும் வடமொழியில் அமைந்து இருந்ததால் அதனை ச் சிறப்பாக அப்படியே தமிழில் தமது புலமைத் திறத்தால் பக்திச்