பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/39

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

24

இராமர் செய்த கோயில்

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தர். அப்பர் ஆகியோரது தேவாரப் பதிகங்களில்

கடலிடை மலைகள் தம்மாலடைத்து மால் கருமமுற்றி
திடலிடைச் செய்த கோவில் திரு இராமேச்சரத்தை

“தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமுகன்
பூவியலும் முடிபொன்று வித்த பழி போயற
வேவியனுந் சிலை யண்ணல் செய்த கோவில்”

எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆழ்வார் பெருமக்கள் தங்களது பக்திச் சுவைமிக்க பாசுரங்களிலும் இராமேசுவரத்துக் கடலடைத்து இலங்கை சென்று பிராட்டியை மீட்டதைப்

பாராட்டிப் பாடியுள்ளனர்.

பெரியாழ்வாரது பாசுரம்

'குரங்கு இனத்தாலே குரைகடல் தன்னை
நெருக்கி அணைகட்டி நீள் நீர் இலங்கை
அரக்கர் அவிய அமுகணையாலே நெருக்கிய
 கைகளால் ............... என்றும்

“சிலையால் மராமரம் எய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் தலையால் குரங்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டு அடைப்ப அலைஆல் கடற்கரை வீற்றிருந்தானை... என்றும் குறித்துள்ளார். அவரது அருமை மகளும் கோதை நாச்சியாருமாகிய ஆண்டாள்.

“சேதுபந்தம் திருத்தினாய் எங்கள்
சிற்றில் வந்து சிதையேல். என்று பாடியுள்ளார்.

மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாச்சாரியரால் புனையப்பெற்ற கந்த புராணத்தில் இராமேசுவரத்து கந்தமாதனம் குறிப்பிடப்படுகிறது. முருகனது


1) பெரியாழ்வார்
2) கோதை நாச்சியார்