பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* || இராமர் செய்த கோயில் தமிழில் சென்ற நூற்றாண்டில் நாடக வடிவிலும் இராமாயணம் வெளிவந்துள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது. 1. உத்தரராம சரிதம் (கி.பி.1878) 2. சிதாகல்யாணம் (£). s. 1889) 3. பாதுகா பட்டாபிஷேகம் (45). f). 1889) 4. சேதுயாத்திரை நாடகம் சிங்கவனத்தார் (பாரதி) 5. இராவண சம்ஹாரம் (£), s), 1899) 6. சம்பூர்ண இராமாயணம் நாகை சண்முகம்பிள்ளை 7. சதமுகராவணன் சண்டை சிங்கவனத்தார் (பாரதி) இந்த நாடகங்களைத் தெருக் கூத்துக்களாகவும். மக்கள் கலைஞர் பலர் இன்னும் சோழ மண்டலத்திலும் தொண்டை மண்டலத்திலும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர இராமாயணம் பற்றிய உரைநடை நூல்களும் மிகுதியாக வந்துள்ளன. மற்றும் இராமாயணக் கதையைப் பாமர மக்களிடையே பக்திச் சிரத்தையுடன் சொற்பொழிவுகள் மூலம் பரப்பும் பணியைப் பல தமிழ்ப்புலவர்கள் செய்து வந்த செய்திகளும் உள்ளன. கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் முத்துவிசய ரெகுநாதசேதுபதி அவையில் மேலச் செல்வனூர் சாந்துப் புலவர் என்பவர் இராமாயணப் பிரசங்கத்தை மிகச் சிறப்பாக மேற்கொண்டதற்காக அவருக்கு பொன்னெட்டி மாலை பரிசு வழங்கியதுடன் அன்று முதல் அந்தப் புலவர் பொன்னெட்டியாபிள்ளை என்றும் “பொன்னெட்டி மாலை சர்க்கரைப் புலவர்” என்றும் பெயர் பெற்றார் என்று தெரிய வருகிறது. 1) கந்தசாமி டாக்டர் எஸ். சேதுபதிகளின் செந்தமிழ்ப்பணி 1976 ஆய்வுரை அச்சில் வராதது.