பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் | | முன்னேறிச் சென்றபொழுது. அவர் இராமேஸ்வரத்தில் தங்கி இருந்தார். அப்பொழுது அவர் நிஸ்ஸங்கேசுவரருக்கு ஒரு கோயில் எடுப்பித்தார் என இராமேஸ்வரம் திருக்கோயில் கொடிக்கம்பத்தருகிலுள்ள கல்வெட்டும். இலங்கை தம்போலா என்ற இடத்தில் உள்ள கல்வெட்டும் தெரிவிக்கின்றன. இவை இரண்டும் பாலி மொழியில் வரையப் பெற்றவை. இராமேஸ்வரத்தைக் குறிப்பிடுகின்ற அடுத்த வரலாற்று ஏ டு பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மதுரைப் பாண்டிய இளவல்களின் பதவிப் போட்டியில் தலையிடு வதற்காகக் கன்னட நாட்டுத் துவார சமுத்திரத்தி லிருந்து வரவழைக்கப்பட்ட தில்லி மன்னரது தளபதி மாலிக்காபூர், மதுரையைக் கொள்ளையிட்டவுடன் அக்டோபர் 1311-ல் இராமேஸ்வரத்திலும் கோயிலில் உள்ள விலை மதிப்பு மிக்க அணிமணிகளைக் கொள்ளையிடுவதற்காக இராமேஸ் வரத்திற்கும் வந்தான் என்பது வரலாற்றுச் செய்தி. இந்தக் கொள்ளைக் காரனையடுத்துக் கி.பி.1318-ல் இந்தப் பகுதிக்கு வந்த இன்னொரு தில்லி தளபதி குஸ்ருகானும் இராமேஸ்வரம் வரை வந்து திரும்பினான். திரு.எஸ்.வெங்கட்டரமணய்யா போன்ற சில வரலாற்று ஆசிரியர்கள் கி.பி.1311 அக்டோபரில் மதுரை வந்த தளபதி மாலிக்காபூர் இராமேஸ்வரம் செல்லவில்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர். இத்தகைய முரண்பாடாக கருத்துக்கு ஆதாரம் பாரசீக நாட்டு ஆசிரியர்கள் வஸ்ஸாபும். பர்னியும் வரைந்துள்ள தெளிவற்ற குறிப்புகள் தாம். இந்தக் கட்டத்தில் தமது நாட்டு வரலாற்று ஆசிரியரான அமீர்குஸ்ரு. எல்பிஸ்டன் குறிப்புகளைத் தங்களது ஆய்விற்கு திரு. வெங்கடரமணய்யர் போன்றோர் ஏன் எடுத்துக் கொள்ளவில்லையென்பது புரியவில்லை. மேலும் இந்த முரண்பாடுகளைக் கிழ்க்கண்ட செய்திகள் தெளிவு படுத்தும் எனக் கருதப்படுகிறது.