பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V அணிந்துரை பாண்டிச்சேரி 15.09, 2004 முனைவர் கோ. விசயவேனுகோபால் முதுநிலை ஆய்வாளர் பிரெஞ்சுத் தொலைகிழக்கு நாடுகள் ஆய்வுப்பள்ளி கண்பார்வை மங்கிய நிலை. உடற்சோர்வு ஆகியன வருத்தியும் கூட உள்ளச்சோர்வடையாதவர் அன்பு நண்பர் திரு. கமால் அவர்கள். வரலாறு. புதினம். செப்பேடுகள். கல்வெட்டுகள் பதிப்பு. ஆய்வுக் கட்டுரைகள் எனத் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவ்வகையில் தற்போது “இர ாமேசுவரம்” என்ற பெயரில் இந்தியாவின் புகழ்மிக்க திருத்தலங்களுள் முக்கியமான ஒன்றினைப்பற்றி எழுதியுள்ளார். இந்திய மக்கள் பாவங்களைக் கழித்துக் கொள்ளும் புனித நீர்த்தலமாகக் கருதி ஆண்டு முழுவதும் வரும் யாத்திரைத் தலம். இராமாயனக் காவியத்துடன். பெளத்த சமயத்துடன். சிங்களவர் படையெடுப்புடன். இப்படிப் பல தொடர்புகளுடன் இயங்கிவரும் உயிர்த் துடிப்பு மிக்க தலம் சேது மன்னர்களது பரந்த கொடைகளாலும் தனியாத பக்தியினாலும் தொடர்ந்து உயர்வு பெற்ற தலம். பொதுமக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பல சிறப்பான செய்திகளை எடுத்துரைக்கும் இந்த நூல் மிகவும் பாராட்டத்தக்கது. ஆசிரியரது அயரா உழைப்பு நூலின் அனைத்துப் பக்கங்களிலும் பளிச்சிடுகிறது. புராணங்கள் தொடங்கி இலக்கியங்கள். கல்வெட்டுகள். செப்பேடுகள் எனப் பன்முகங்களில் இராமேசுரத் தலத்தின் சிறப்புக்கள் இயல்பான எளிய நடையில் தெரிவிக்கப் பட்டுள்ளன. திருக்கோவில் அமைப்பு. வழிபாடுகள்.