பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI பின்பற்றப்படும் நடைமுறைகள் || வாகனங்கள். சிலைகள். செப்புத் திருமேனிகள் எனப் பகுதி பகுதியாகக் சிற்பி செதுக்குவது போல் செய்தினை (, , தந்துள்ளார் ஆசிரியர். கோயில் பண்டாரம், அவரது தி நடததைகள். சேது மன்னர்களது பரந்த உள்ளம் எனப் பல பரிமானங்கள் இந்நூலில் ஒளிபெறச் செய்யப்பட்டுள்ளன. கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இராமேசுவரத்தைப் சுற்றியுள்ள புனிதத் தலங்களும் கூட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இராமேசுவரம் பற்றிய ஆவனங்கள். சேது மன்னர்களது அறக்கொடைகள் எல்லாம் கால வாரியாகத் துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளன. இப்படிப் பல பரிமானங்களுடன் “பட்டை திட்டப்பட்ட வைரம் போல” ஒளிர்கிறது நூல். இராமேசுவரம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் ஊர் என்பதை ஆசிரியர் மிகச் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். ஆசிரியரது நிறைவு வரிகள் இந்தியக் குடிமகன் ஒருவனின் பாரபட்சமற்ற உணர்வுச் சிதறல்களாகப் படிப்பவர் மனத்தை உருக்குகின்றன. இராமேசுவரம் வந்தவர். வருபவர் கையில் இருக்க வேண்டிய நல்ல நூல். அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுமெனப் பரிந்துரைக்கின்றேன். வாழ்க நண்பர் கமால் வளர்க அவரது எழுத்துப் LIGশকf7. அன்புடன் கோ. விசயவேனுகோ பால்