பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

რრ இராமர் செய்த கோயில் செயல்பட ஆவன செய்தார். இந்தக் கட்டுமானம் இன்றைய இராமேஸ்வரம் நகரின் நடுத்தெருவரின் மேற்குக் கோடியும் வர்த்தகன் வீதியின் வடக்குக் கோடியும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டு மலையாள சத்திரம் எனப் பலவருடங்கள் அழைக்கப்பட்டுவந்தது. தற்பொழுது இந்தக் கட்டுமானம் அங்கு இல்லை. இதே மன்னர் இராமநாத சுவாமியின் காலை பூஜை சிறப்பாக நடைபெறுவதற்காகச் சந்தி ஒன்றையும் ஏற்படுத்தி னார். இன்றும் அந்த சிறப்பு வழிபாடு உதய மார்த்தாண்ட சந்தி என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.