பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3) நகராத்தார்கள் திருப்பணிகள் பிந்தைய காலங்களில் அதாவது கி.பி.18. 19-ம் நூற்றாண்டுகளில் சேது நாட்டுக் குடிகளான நகரத்தார்கள் என வழங்கப்பெறும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் இந்தக் கோவில் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட பல செய்திகள் கிடைத்துள்ளன. சேது நாட்டின் வட பகுதியான புற மலை நாடு. அதளையூர் நாடு, சூரக்குடி நாடு. கா நாடு, கோ நாடு. பூங்குன்ற நாடு. இரணியூர் நாடு. கல்வாசல் நாடு. பாலைநாடு ஆகிய பகுதிகளில் குடியிருந்து வந்த தொன்மைக் குடிகளான வணிகர்கள், செட்டியார்கள் என அழைக்கப்பட்டு வந்தனர் இவர்கள் சங்க காலத்தில் சோழ நாட்டின் முட்டாக் சிறப்புடன் விளங்கிய காவிரிப் பூம்பட்டனத்தின் குடிகளாக இருந்து அங்கு ஏற்பட்ட கடல்கோளினால் குடிபெயர்ந்து சோழ நாட்டின் தென்பகுதியான சேது நாட்டில் கி.பி. 4 அல்லது 5-ம் நூற்றாண்டுகளில் குடியேறியவர்களாகக் கருதப்படுகின்றனர் இவர்களில் இன்றைய திருப்பத்துர் வட்டத்தின் வடகிழக்கே உள்ள இளையாத்த குடியில் முதலில் தங்கியிருந்து பின்னர் பல திட்டுகளிலும் ஒன்பது பிரிவினராகப் பிரிந்து சென்று ஆங்காங்கு கோவில்களையும். குளங்களையும் அமைத்துக் காடு திருத்திக் கழனிகள் செய்து வீடு அமைத்து வாணிகத்தில் வளர்ந்தோங்கி வாழ்ந்தனர். அந்தப் பிரிவினர் பிள்ளையார் பட்டி வையிரவன் பட்டி மாத்துர். சூரைக்குடி. வேலங்குடி நேமம், இலுப்பக்குடி, இளையாத்தக்குடி. இரணியூர் ஆகிய அளர்களில் அமைத்த திருக்கோவில்களை முதன்மையாகச்