பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 75 நடைபெறும் வரிபூதி அபிஷேகத்தை வேகோட்டை அழ.அரு. குரும்பத்தார் மேற்கொண்டு நடத்தி வருகின்றனர் சதாவிருத்திப் பணி இந்தப் பணியினை து ) ஆண்டுகளுக்கு மேலாகச் கண்டனுார் சி.ராம சொக்கலிங்க செட்டியார் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணிக்கு இராம.திர்த்ததிற்கு அருகில் சுமார் ஏழு ஏக்கர் நிலத்தில் இதற்கான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இராம திர்த்தத்திற்கு சுவாமி எழுந்தருளும்போது வருகின்ற வேத பாராயணிகளுக்கும். நகரத்தார்களுக்கும் இந்தச் சத்திரத்தில் அன்னம் பாலிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மேலும் பிற நாட்களில் இராமேஸ்வரம் வருகின்ற வடநாட்டு சன்னியாசிகளுக்குப் போதுமான கோதுமை, நெய். மிளகாய். உப்பு முதலானவை இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்தகைய சிரிய திருப்பணிகளால் செட்டி நாட்டு நகரத்தார்கள் தங்கள் பாரம்பரியப் பண்பான பக்திக்கும். இறைத் தொண்டிற்கும் ஏற்ற எடுத்துக்காட்டுகளாக விளங்கி வருகின்றனர். இரண்டாவது உலகப் போரின் அழிவினால் நமது நாட்டில். குறிப்பாகத் தமிழகத்தில். நகரத்தார் சமூகத்தினரிடையே வாழ்க்கை நிலைகளில் பயங்கரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ள பொழுதிலும் இம் மக்கள் தங்களது உயிருக்கு உறு துனை யாக அமையும் ஆன்மீகத் தொண்டுகளைச் சிறப்பாகத் தொடர்ந்து வருவது பாராட்டிற் குரியது ஆகும்.