பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் * || திபத்தையும் முன்போலச் செய்கிறார். இவ்விதம் செய்யும் பொழுது பட்டர் வடக்கு நோக்கியவாறு நிற்கிறார். இறைவனை நைவேத்தியங்களை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்வதுடன் திருவனந்தல் என்ற இந்த காலை வழிபாடு முடிவடைகிறது. அடுத்து காலை 7.00 மணிக்குச் சுவாமிக்கு உதயமார்த் தாண்ட சேவை தொடங்குகிறது. பின்னர் காலை 9.00 மணிக்கு உதயகாலவழிபாடு தொடங்குகிறது. உச்சிக்காலத்தில் உச்சிக்கால பூஜை மாலையில் சாயரட்சை. இரவு அர்த்த ஜாம பூஜை என ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. அந்தப் பூஜைகள் சுவாமிக்கு மட்டுமல்லாமல் பர்வதவர்த்தினி அம்மன். விசுவநாத வரிசாலாட்சி அம்மன். அனுமான் ஆகியோரது சந்நிதிகளிலும் நடத்தப் பெறுகின்றன. பொதுவாக வழிபாடுகளில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து வருகின்றன. இந்தப் பூஜைகளுடன் நாள்தோறும் அல்லது சில குறிப்பிட்ட நாட்களில் சிறப்புப் பூஜைகளும் நடத்தப்படுவதற்காக சேதுபதி மன்னர்களும், பிறரும் சில கட்டளைகளை ஏற்படுத்தி உள்ளனர். உடையார் தேவர் கட்டளை, உடையார் கட்டளை. நாயக்கர் கட்டளை. பிரதானி கட்டளை. பிச்சர் கட்டளை என சில கட்டளைகள் இருந்ததை 28.08.1772ம் தேதியிட்ட திருக்கோவில் செப்பேடு ஒன்றில் இருந்து தெரிய வருகிறது. மைசூர் மன்னர் சுக்கிரவாரக் கட்டளை ஒன்றினையும். திருவாங்கூர் மன்னர் உதயமார்த்தாண்டக்கட்டளையும் ஏற்படுத்தி இருக்கின்றனர். நாள்தோறும் நான்கு சன்னதிகளிலும் சிறப்பான நைவேத்தியம். விளார் பூஜை. உச்சிக்கால பூஜை. சாயரட்சை பூஜை. ருத்திர பஞ்சாங்கம். சித்திரைத் திருநாள். பாலா பிஷேகம் ஆகியவை நடைபெறுவதற்காக திருவாங்கூர் மன்னரது கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டளைகளில் வழக்கமாக