பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

¥ጋ இராமர் செய்த கோயில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் படைக்கப்படும் நிவேதனங்களுடன் சிறப்பாக அதிரசமும், முறுக்கு ஆகிய பலகாரங்களும் சமர்ப்பிக்கப்படுகின்றன. 2) பிற நடைமுறைகள் பழமையும். பெருமையும் வாய்ந்த தமிழகத் திருக்கோவில் களில் ஆகம முறைப்படி நாள்தோறும் ஐந்து அல்லது ஆறுகால பூஜைகள் நடைபெறுவது இயல்பு. மற்றும் சிறப்புக் கட்டளைகளும் ஆண்டுத் திருவிழாக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. சேதுபதி மன்னரது நிர்வாகத்தில் உள்ள திருச்சுழியல். திருஉத்திரகோச மங்கை, திருமருது.ர். திருவாடானை, திருப்புல்லாணி. இராமேஸ்வரம் திருக்கோயில்களிலும் இத்தகைய பூஜைகளும். திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தக் கோயில்கள் அனைத்திலும் நடைபெறும் நடைமுறைகளைப் போல் அல்லாமல் வேறுபட்ட வகையில் இராமேஸ்வரம் திருக்கோவில் நடைமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் திருக்கோயில் இந்தியத் திருநாட்டின் இதிகாசமான இராமாயணத்துடன் தொடர்புடைய னத்தினால் மற்ற கோயில்களுக்கு இல்லுாத முறையில் 11ஜைகளும். விழாக்களும் இங்கு அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளாக அவைகள் சிறப்பாக நடைபெற அன்றைய ஆட்சியாளர்களான .ே துபதி மன்னர்கள் உதவரினர். இன்று சேது நாட்டில் சேதுபதிகளது முடியாட்சி இல்லையென்றாலும் அவர்கள் 1% மேஸ்வரம் கோயிலுக்கு முற்று ட்டாக வழங்கியுள்ள 1ளர்களின் வருவாயில் இருந்து இந்தப் புஜைகளும். வார. பட்ச மாத விழாக்களும் ஆண்டுத் திருவிழாக்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.