பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 器 93 霧 பார்சொ ரிந்திடும் பவநெறி முயன்றேன் . பாவி யேன்தனைக் கூவிநின் றாள்வாய், கார்சொ ரிந்தெனக் கருணைஈந் தன்பர் களித்த நெஞ்சிடை ஒளித்திருப்பவனே தேர்சொரிந்தமா மணித்திரு வீதித் . திகழும் ஒற்றியூர்த் தியாகநாயகனே (10) என்பது பத்தாம் பாடல். நீர் சொரிந்து விளக்கு எரிக்க முடியுமா?’ என்ற பழமொழி இதில் அமைந்திருப்ப தைக் காணலாம். 66. தனிமைக்கிரங்கல்: இதுவும் திரு ஒற்றியூர் இறைவனை நோக்கி வேண்டுவதாக அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. பாடல்கள் எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. இமைக்கும் அவ்வள வேணும்நெஞ் சொடுங்கி இருக்கக் கண்டிலேன் இழிவுகொள் மலத்தின் சுமைக்கு நொந்துநொந் தையவோ நாளும் - துயர்கின்றேன்.அவர் கின்றஎன் துயரைக் குமைக்கும் வண்ணம்நின் திருவருள் இன்னும் கூடப் பெற்றிலேன் கூறுவ தென்னே உமைக்கு நல்வரம் உதவிய தேவே ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே (3) முன்னை நான்செய்த வல்வினை இரண்டின் முடிவு தேர்ந்திலன் வடிவெடுத் துலகில் என்னை நான்கண்ட தந்தநாள் தொடங்கி இந்த நாள்மட்டும் இருள்என்பதல்லால் பின்னை யாதொன்றும் பெற்றிலேன் இதனைப் பேச என்னுளம் கூசுகின்றது.காண் உன்னை நம்பினேன் நின்றுகிப் புனரேன் ஒற்றி ஓங்கிய உத்தமப் பொருளே (7) என்பவை இப்பதிகத்தின் இரண்டு பாடல்கள். பாடல்கள்