பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 102 曦 இராமலிங்க அடிகள் முடியாத நிலையை விரித்துரைப்பது இப்பதிகம். பாடல் கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தயாப்பில் அமைந்தவை. மூன்று பாடல்களைக் காட்டுவேன். (பத் துப் பாடல்கள் கொண்டவை இப்பதிகம்.) தேனர் கமலத் தடஞ்சூழும். திருவாழ் ஒற்றித் தியாகர்.அவர் வானார் அமரர் முனிவர்தொழ மண்ணோர் வணங்க வரும்பவனி தானார் வங்கொண் டகமலரத் தாழ்ந்து சூழ்ந்து கண்டலது கானார் அலங்கல் பெண்ணேநான் கண்கள் உறக்கம் கொள்ளேனே (1) செல்வத் துறளும் பொழில்ஒற்றித் தெய்வத் தலங்கொள் தியாகர்.அவர் வில்வந் திகழும் செஞ்சடைமின் விழுங்கி விளங்க வரும்பவனி சொல்வந் தோங்கக் கண்டுநின்று தொழுது துதித்த பின்அலது அல்வந் தளகப் பெண்னேநான் அவிழ்ந்த குழலும் முடியேனே (4) சிந்தைக் கினியார் ஒற்றிநகர் திகழும் செல்வத் தியாகர்.அவர் சந்தத் தடந்தோள் கண்டவர்கள் தம்மை விழுங்க வரும்பவனி முந்தப் புகுந்து புளகமுடன் மூடிக் குளிரக் கண்டலது கந்தக் குழல்வாய்ப் பெண்ணேநான் கண்ணி ஒழியக் கானேனே (7) பாடல்கள் யாவும் பவனித் திறனை பாங்குடன் புலப்ப டுத்துகின்றன. பாடல்களைப் படித்து அநுபவிக்கும்