பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠍 104 鬱 இராமலிங்க அடிகள் குயிலிற் குலவி அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே (10) பாடல்களில் ஆழங்கால்பட்டு அவற்றை அநுப விக்கும்போது நாமும் நற்றாய் நிலையை அடைந்து விடுகின்றோம். 87. குறி ஆராய்ச்சி: இதுவும் திருஒற்றியூர் பெரு மான்மீது அமைந்த திருப்பதிகமாகும். குறத்தியிடம் குறிகேட்டல், வேலனை வினாவுதல் என்பன போன் றவை அக இலக்கிய மரபுகள். சிலப்பதிகாரம்முதல் காவியங்களிலும் இடம் பெற்றுள்ளன. குறி கேட்டலை அடிப்படையாகக் கொண்டு 'குற்றாலக் குறவஞ்சி' என்ற இலக்கியமும் தோன்றியுள்ளது. இந்த மரபு அடிகளின் திருப்பாடல்களிலும் இடம்பெற்றுள்ளது. இப்பதிகம் குறத்தியைக் குறி கேட்பதாய் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் பதினொரு பாடல்களால் இயன்றது. நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க நடனம் புரியும் நாயகனார் அந்தி திறத்தார் திருஒற்றி அமர்ந்தார் என்னை அனைவாரோ புந்தி இலள்என்றணைவாரோ யாதும் தெரியேன் புலம்புகின்றேன் சிந்தை மகிழக் குறமடவாய் - - தெரிந்தோர் குறிதான் செப்புவையே (1) பொன்னர் புயத்துப் போர்விடையார் புல்லர் மனத்துட் போகாதார் ஒன்னார் புறந்தி உறநகைத்தார் ஒற்றி எனும்ஒர் ஊர்அமர்ந்தார் என்னா யகனார் எனைமருவல் - இன்றோ நாளை யோஅறியேன் மின்னார் மருங்குல் குறமடவாய் விரைந்தோர் குறிநீ விளம்புவையே (5)