பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் * 107 牵 பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார் மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வானர் பவனி வரக்கண்டேன் மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து) இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே (1) புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார் . மன்னும் விடையார் திருஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன். உன்னும் உடலம் குளிர்ந்தோங்க உவகை பெருக உற்றுநின்ற என்னை விழுங்கும் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே (5) கண்ணன் அறியாக் கழற்பதத்தார் கண்ணார் நெற்றிக் கடவுள்அருள் வண்ணம் உடையார் திருஒற்றி வானர் பவனி வரக்கண்டேன் நண்ண இமையார் எனஇமையா நாட்டம் அடைந்து நின்றனடி எண்ண முடியா அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே (9) பாடல்கள் யாவும் 'என்னென்றுரைப்ப தேந்திழை யே’ என்று முடிகின்றன. பெரும்பாலும் உலா இலக்கி யத்தில் ஏழு பருவ மாதர்களின் அழகை வருணிப்பது மரபு. ஈண்டு உலாவந்த இறைவன் அழகை வருணிப்ப தாகப் பாடல்கள் அமைகின்றன. அங்கு மாதர்களின் அழகை வருணிப்பவர் கவிஞர். ஈண்டு உலாவரும்