பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii நாயன்மார்களும் ஆழ்வார் பெருமக்களும் தலங்கள்தோறும் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் மூர்த்திகளை நேரில் தரிசித்து அவ்வப்போது எழும் உணர்வுகளுக்கேற்பப் பாடல்களை யும் பாசுரங்களையும் பாடி வழிபட்டு மகிழ்வர். ஆனால், நம் அடிகளும் அவ்வாறு சென்று மூர்த்திகளை தரிசித்தபோது, தரிசித் ததுடன் மன அமைதி பெறுவர். இருப்பிடம் திரும்பியவுடன் தியானத்தில் இறங்குவர். தியானம் முடிந்து விழிப்பு நிலையில் பாடத் தொடங்குவர். அப்பாடல்களில் இறைவன் தமக்குக் கனவு நிலையிலும் நனவு நிலையிலும் காட்சி தந்து அருளிய நிகழ்ச்சிக ளும் பயின்றுவரப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம். பாடல்க ளும் நாயன்மார் ஆழ்வார் அருளிச் செயல்களில் பதிகங்களும் அவற்றில், 10, 11 பாடல்களின் தொகைகளும் மாறாமல் இருப்ப தைக் காணலாம். நம் வள்ளற் பெருமான் பதிகங்களில் எந்தவித வரையறைகளும் இல்லாமல் இருப்பதைச் சிறப்பாகக் காணலாம். நாயன்மார் ஆழ்வார் பாடல்கள், பாசுரங்களைப் பயிலும்போது அவர்கள் அநுபவித்த இறையநுபவம் மட்டிலுமே நம் மனத்தில் எழும். ஆனால் வள்ளற் பெருமான் பாடல்களில் ஈடபட்டுப் பாடி மகிழும்போது இறையதுபவத்துடன் பெருமானின் சொந்த அநுப வமும் கலந்து நம் மனத்தில் எழும். நம்மிடமும் வள்ளல் பெருமானாகவே மாறும் மனநிலையும் தோன்றத் தொடங்கும். மணிவாசகப் பெருமானின் திருவாசகத்தைத் தான் கலந்து பாடுங் கால் அவருக்கு ஏற்பட்ட நற்கருப்பஞ்சாற்றினிலே, தேன் கலந்து பால் செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என், ஊன் கலந்து உயிர் கலந்து, உவட்டாமல் இனிப்பதை அடிகள் உணர்ந்ததைப்போல், நாம் வள்ளற் பெருமான் பாடல்களில் ஈடுபட்டு அநுபவிக்கும் போது அத்தகைய அநுபவத்தைப் பெற்றதை உணர்ந்ததுண்டு. இந்த அநுபவம் பாடல்களில் ஈடுபட்டுப் பயிலும்போது அனைவ ருக்கும் ஏற்படும் என்பது என் உறுதியான நம்பிக்கை. * இந்த நூல் நான் அடிகளாரின் பாடல்களில் அதிகமாக ஈடுபட்டுப் பாடி அதுபவித்த பாடல்களில் சிலவற்றைத் திருமு றைகள் தோறும் தேர்ந்தெடுத்த தொகுப்பும் பதிகந்தோறும் நான் எழுதிய குறிப்பும் கொண்டவை. முதல் கட்டுரை அடிகளாரின் வரலாறும், இறுதியாக நூலின் நிறைவுரையும் நூலில் சேர்ந்துள்