பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 織 425 緣 ஒன்றாய்ப் பலவாய் உயிராய் உயிர்க்குயிராய் நன்றாய் நவமாய் நடுநிலையாய் நின்றோங்கும் வேதமாய் வேதாந்த வித்தாய் விளங்குபர நாதமாய் நாதாந்த நாயகமாய் - ஒதும் - (4-8) என்று தொடங்கி ஆலமரம்போல் விரியத் தொடங்கு கின்றது. ஆங்காங்கு சிலவற்றைக் காட்டிச் செல்வேன். அகமாய் புறமாய் அகம்புறமாய் நீங்கும் சகமாய்ச் சுகமாயை தானாய் - சகமாயை இல்லாதாய் என்றும் இருப்பதாய் யாதொன்றும் கொல்லாதார்க் கின்பம் கொடுப்பதாய் - எல்லார்க்கும் நண்ணுவதாய் நண்ணாதாய் நல்வினையாய் அல்வினையாய் எண்ணுவதாய் எண்ணில் இயலாதாய் - எண்ணுகின்ற வானாய் நிலனாய் வளியாய் அனலாய்நீர் தானாய் வழிபடுநான் தான் தானாய் - (21-24) என்றும், நிற்கும் பிரம நிரதிசயா னந்தமதாய் நிற்கும் பரம நிருத்தனெவன் - தற்பரமாய் நின்றான் எவனன்பர் நேயமனத் தேவிரைந்து சென்றான் எவன்சர்வ தீர்த்தனெவன் - வன்தீமை இல்லான் எவன்யார்க்கும் ஈசன்எவன் யாவும் வல்லான் எவனந்தி வண்னனெவன் - கல்லாலில் சுட்டகன்ற ஞான சுகாதீதம் காட்டிமுற்றும் விட்டகன்ற யோக வினோதனெவன் - மட்டகன்ற