பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

锋 126 豪 இராமலிங்க அடிகள் அண்டங்கள் எல்லாம் அணுவில் அடைத்தருளித் திண்டங்கு மாறிருத்தும் சித்தனெவன் - (55-60) என்றும் கூறுவார். கண்ணி 60 தொடங்கி கண்ணி 99 வரை இறைவ னைச் சித்தனாகக் காட்டுகின்றார். அடுத்து அப்பெருமா னைக் கள்வனாகக் காட்டத் தொடங்குகின்றார். நீட்டாது நெஞ்சம் நிலைத்தவர்க்கும் தன்னுண்மை காட்டாது காட்டிதிற்கும் கள்வனெவன் - பாட்டோடு வண்டாலும் கொன்றை மலரோய் எனமறைகள் கண்டாலும் காணாத கள்வனெவன் தொண்டாக அள்ளம் செறியார்க்கே அன்றி அறியார்க்குக் கள்ளம் செறியாத கள்வனெவன் - எள்ளலறக் கொண்டவெலாம் தன்பால் கொடுக்குமவர் - தம்மிடத்தில் கண்டவெலாம் கொள்ளைகொளும் கள்வானவன் - கொண்டுளத்தில் தன்னையொளிக் கின்றோர்கள் தம்முளொளித் துள்ளவெலாம் கன்னமிடக் கைவந்த கள்வனெவன் - மண்ணுலகைச் சற்பனைசெய் கின்றதிரோ தானமெனும் சத்தியினால் கற்பனைசெய் தேமயக்கும் கள்வனெவன் - முற்படுமித் தொண்டுலகில் உள்ளஉயிர் தோறுமொளித் தாற்றலெலாம் கண்டுலவு கின்றதொரு கள்வனெவன் - (100-106) என்று காட்டி இக்"கள்வன்' என்ற கருத்தை 109 கண்ணி வரை நீட்டி மகிழ்கின்றார். அடுத்து ஐந்து கண்ணிகளில் (110-114) இறைவ னைச் சதுரன் எனச் சாற்றுகின்றார்.