பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii ளன. ஆறு திருமுறைகளையும் உரையிருப்பினும் அதனோடு சேர்த்து திரு முறைகள் முழுவதையும் அனைவரும் படித்தல் என்பது நடைமுறையில் இயலாத்தொன்று. ஆயினும், வள்ளல் பெருமானின் சில பாடல்களையாவது படித்து அதுபவித்து அவர் தம் கொள்கைகளைக் கடைப்பிடித்து அவற்றின்படி வாழ்வது சமூகநலத்திற்கு உகந்தது. சமயப் பிணக்கும் சாதிவேற்றுமையும் தலைதூக்கிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இக்காலத்திற்கு மிகவும் பொருந்தக் கூடிய ஒன்று. இந்த நோக்கத்துடன் இந்நூல் தொகுக்கப் பெற்று வெளிவருகின்றது. நான் பெற்ற அநுபவத்தையே பொதுமக்களும் பெற்று அது வித்தால் சமயப் பிணக்கு ஒழிந்து சமரச நிலை ஏற்படும் என்ப தும், அடிகளாரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து மனநிறைவுட னும் அமைதியுடனும் வாழ்ந்தால் நாமும் அடிகளாரைப் போல் அருட் பெருஞ்சோதியில் கலக்கவும் வழி அமையும் என்பதும் என் எதிர்பார்ப்புகள். அப்படி நேர்ந்தால் புதியதொரு சமூகமும் உருவாக வழி ஏற்படும் என்பதும் என் நம்பிக்கை. தரமான நூல்களை வெளியிட்டுப் புகழ்பெற்று வரும் கலை ஞன் பதிப்பகம். கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு என்ற நூலை வெளியிட்ட நிலையில் இந்நூலையும் ஏற்று வெளியிட இசைவு தெரிவித்த பதிப்பகத்தாருக்கும் புருஷகாரம் செய்வித்த திரு.ப.முத்துக்குமார சுவாமிக்கும் என் இதயங்கலந்த நன்றி என்றும் உரியது. . இந்நூல் அச்சாகுங்கால் மூலப்படியுடன் பார்வைப் படிவங் களை ஒப்பிட்டுச் சரிபார்த்து, அச்சிட உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு.ப.சியாமளாவுக்கு என் அன்பு கலந்த ஆசியுடன் கூடிய நன்றி என்றும் உரியது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் சில ஆண்டுகளாக நெருங்கிப் பழகி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அருமை நண்பர் பொறிஞர் சி.எஸ். குப்புராஜ் (முன்னாள் தலைமைப் பொறியாளர், பொதுப்பணித் துறை) ஆவர். பொதுப் பணி பொறி யியல் துறையில் பணியாற்றி வந்த காலத்திலேயே பொதுமக்கள்