பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亲 ±32 家 இராமலிங்க அடிகள் இறந்தார் பிறந்தார் இறந்தார் எனும்சொல் மறந்தாய் மறந்தாய் மறந்தாய் - இறந்தார் பறையோசை அண்டம் படீர்என்று ஒலிக்க மறையோசை அன்றே மறந்தாய் - இறையோன் புலனைந்தும்' என்றருளும் பொன்மொழியை மாயா மலமொன்றி அந்தோ மறந்தாய் - நிலனொன்றி விக்குள் எழநீர் விடுமின் எனஅயலோர் நெக்குருகல் அந்தோ நினைந் திலையே (461-471) என்ற கண்ணிகளில் இந்த அறவுரையைக் காணலாம். இன்னும் இப்பகுதி மிகவும் நீளுகிறது. (கண்ணி 496 வரை). அடுத்து, இறுதிவரை வரும் கண்ணிகள் ஒவ்வொன் றும் தனித்தனிக் கருத்துகள் அற்புதமாய்ச் சொல்லப் பெறுகின்றன. அவை ஒவ்வொன்றையும் ஆழ்ந்து கற்று அசைபோட்டு உணர்ந்தால் வள்ளல் பெருமா னின் வான்புகழ் தெளியப்படும். அவர்தம் மனவிரிவும் நுண்ணுணர்வும் அறியப்பெறும். இறுதிக் கண்ணி, பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும் வாழ்வாய்என் னோடும் மகிழ்ந்து என்று முடிகின்றது. அறிவுறுத்திய நெஞ்சைத் தம் மோடு அன்புடன் இணைத்துக் கொள்ளுகின்றார். 4. புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்(டு) ஐமேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல்என்(று) அருள்செய்வான் அமருங் கோயில வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழைஎன்று அஞ்சி சிலமந்தி அலமாது மரமேறி முகில்பார்க்கும் திருவை யாறே (சம்பந்தேவா.1.130:1)