பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 笨 篡33 笨 4. சிவநேச வெண்பா. இது காப்பு இரண்டும், நூலில் 100 வெண்பாக்களும் கொண்டது. உள்ளத்தை உருக் கிச் சிவனோடு ஐக்கியமாக்கும் பல வெண்பாக்கள் இதில் அடங்கியுள்ளன. முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் சொன்னவனே தூய்மெய்ச் சுகத்தவனே - என்னவனே சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே நற்பரனே நின்தாள் சரண். (1) இது விநாயகர்மேல் காப்பாக அமைந்திருப்பது. நூல் இனிது முடிய ஐங்கரனிடம் சரண்புகுந்து வேண்டுகின் றார். அடுத்து வருவது அவன்தம்பி ஆறுமுகத்தான்மீது அமைந்தது. வீறுடையாய் வேலுடையாய் விண்ணுடையாய் வெற்புடையாய் நீறுடையாய் நேயர்கடந் நெஞ்சுடையாய் - கூறு முதல்வாஒர் ஆறு - முகவா முக்கண்ணன் புதல்வா நின்தாள்என் புகல் (2) இதுவும் ஒரு முறையில் முருகனைச் சரண்புகுந்து வேண்டுவது. நூலில் உருக்கமான சில பாடல்களைக் காட்டுவேன். * சீர்சான்ற வேதச் செழும்பொருளே சிற்சொரூபப் பேர்சான்ற உண்மைப் பிரமமே - நேர்சான்றோர் நாடும் பரசிவமே நாயேனுக் கன்புநின்பால் நீடும் படிநீ நிகழ்த்து (1) இது நூலின் முதற்பாடல் பொருள் வெளிப்படை. அப்பகலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில்