பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 宗 135 拳 பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை வேண்டதார் வீழ்ந்து விரைந்து (34) கண்ணுதலே நின்தாள் கருதாரை நேசிக்க எண்ணுதலே செய்யேன்மற் றெண்ணுவனே - மண்ணுலகில் ஆமிடத்து நின்அடியார்க் காசையுரைத் தில்லையென்பார் போமிடத்தில் போவேன் புலர்ந்து (35) வெள்ள்முதும் தேனும் வியன்கரும்பும் முக்கனியின் உள்ளமுதும் தெள்ளமுதும் ஒவ்வாதால் - கள்ளமிலா நின்அன்பர் தம்புகழின் நீள்மதுரந் தன்னை இனி என்னென்ப தையா இயல்பு (40) எங்கோவே யான்புகலி எம்பெருமான் தன்மணத்தில் அங்கோர் பொருட்சுமையாள் ஆனேனேல் - இங்கேநின் தாள்வருந்த வேண்டேன் தடைபட்டேன். ஆதலினிந் நாள்வருந்த வேண்டுகின்றேன். நான் (42) பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு நாவுக் கரையரெனு நன்னாம் - மேவுற்ற தொண்டர்க்கு நீகட்குச் சோறெடுத்தாய் என்றறிந்தோ தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல் (43) முன்மனத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல் என்மனத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில் ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி இன்றும் ஒருமணம்செய் வேன் (52) மாதேவா ஒவா மருந்தேவா மாமணி.இப் போதேவா என்றே புலம்புகின்றேன் - நீதாவா யானாலும் சித்த மறியேன் உடம்பொழிந்து போனாலென் செய்வேன் புகல் (59) வெள்ளைப் பிறைஅணிந்த வேணிப் பிரானேநான் பிள்ளைப் பிராயத்தில் பெற்றாளை - எள்ள்ப்