பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 岑 139 * விண்னேவிண் உருவேவிண் முதலே விண்ணுள் வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன் கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட் கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே தண்ணேதண் மதியே.அம் மதியிற் பூத்த தண்ணமுதே தண்ணமுத சார மேசொல் பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின் பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே (26) மறைமுடிக்குப் பொறுத்தமுறு மணியே ஞான வாரிதியே அன்பர்கடம் மனத்தே நின்ற குறைமுடிக்கும் குணக்குன்றே குன்றா மோனக் கோமளமே தூயசிவக் கொழுந்தே வெள்ளைப் பிறைமுடிக்கும் பெருமானே துளவ மாலைப் பெம்மானே செங்கமலப் பிரானே இந்த இறைமுடிக்கு மூவர்கட்கு மேலாய் நின்ற இறையேஇவ் வுருவுமின்றி இருந்த தேவே (33) அண்டமெலாம் கண்ணாகக் கொளினும் காண்டற் கணுத்துணையும் கூடாவென் றனந்த வேதம் விண்டலறி ஓலமிட்டுப் புலம்ப மோன வெளிக்குள்வெளி யாய்நிறைந்து விளங்கும் ஒன்றே கண்டவடி வாய்அகண்ட மயமாய் எங்கும் கலந்துநின்ற பெருங்கருனை கடவு ளே.எம் சண்டவினைத் தொடக்கறச்சின் மயத்தைக் காட்டும் சற்குருவே சிவகுருவே சாந்தத் தேவே (43) உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் துடே கடலனைய பேரின்பம் துளும்ப நாளும் கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே விடலரிய எம்போல்வார் இதயங் தோறும் வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்