பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv சேவையில் ஆர்வங் கொண்டு பணியாற்றியவர். அருட்பிரகாச வள்ளற் பெருமான்பாலும் அவர்தம் அருளிச் செயல்பாலும் ஆராக் காதல் கொண்டவர். அவர்தம் கொள்கைகளைக் கடைப்பிடித்தும் மக்களிடையே பரப்பியும் வருபவர். பல்லாண்டுகளாக சைவ சித்தாந்தப் பெருமன்றத் துணைத் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் சைவசித்தாந்தக் கருத்துகளில் அதிக ஈடுபாடு கொண் டிருந்த இப்பெருமகனாரிடம் வள்ளற் பெருமானின் கொள்கைக ளும் தலைதூக்கி நின்றன. கூட்டங்களில் தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று சொல்வதற்குப் பதிலாக சில சைவச் சான்றோர்களின் வெறுப்பை யும் பொருட்படுத்தாது அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி, தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்று சொல்லுவார். இவர்தம் மூதாதையர் ஒருவர் வள்ளற் பெருமானின் நேரடிச் சீடர். 'குடும்ப கோரம் என்ற வள்ளல் பெருமானின் அருளிச் செயல் இவர்தம் குடும்ப வரலாறு கொண்டது. இத்தகைய பெருமகனாரி டம் சிறுவயது முதற்கொண்டே வள்ளல் பெருமானின் அருளிச் செயல்களில் ஈடுபாடு கொண்ட அடியேன் அவர்தம் கொள்கை யின் உந்தலால் தூண்டப் பெற்று எழுதிய இத்தொகுப்பு நூலுக்கு அணிந்துரை பெற்றது. இந்நூலின் பேறு; என் பேறும் கூடத்தான். என்பால் உழுவலன்பு கொண்டு அணிந்துரை வழங்கிய இப்பெரு மகனாருக்கு என் இதயங்கனிந்த நன்றி என்றும் உரியது. . இந்த நூலை வள்ளல் பெருமான் பாடல்களில் ஈடுபட்டுப் படித்தும் அவர்தம் கொள்கைகளைக் கடைப்பிடித்தும் வாழ்ந்தும் வாழும் வள்ளல் பெருமானின் முன்னைய, இன்றைய, எதிர்வரும் காலத்து அடியார்கள் அனைவருக்கும் அன்புப் படையலாக்கிப் பெருமிதம் கொள்ளுகின்றேன். 1941 - 1950இல் துறையூரில் உயர்நிலைப் பள்ளித் தலை மையாசிரியனாகப் பணியாற்றிய காலத்தில் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் வட்டத்தில் சில ஊர்களில் ரெட்டி குலப் பெருமக்க ளால் தவறாமல் ஆண்டுதோறும் இலவச உணவு அளித்து நடைபெறும் வள்ளல் பெருமான் பிறந்த நாள் விழாவில் பலமுறை பங்கு கொண்டு பேசியதுண்டு. திருவருட்பாவில் ஈடுபாடு கொண்டு முறையாகப் படிக்காவிட்டாலும் அவ்வப்போது சில