பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • 148 *

ஊன்எழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க நான்எழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே (49) மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர் திருப்பா சுரம்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நிறைந்தே விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திடவே இன்றென்னை கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைகண்டனே (54) வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம் பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச் சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டும் திகழ்முலையைத் தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே (62) சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும் இம் மனத்தால் உறுந்துயர் போதாமை என்றுமதித் துச்சுற்றும் இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய் அனந்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே (66) மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில் இராமலிங்க அடிகள்