பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 举 151 岑 குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே (151) பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக் கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன் மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே (156) சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான் மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய மாலுக்கு வாங்கி வழங்கவும் தான்சம் மதித்ததுகாண் பாலுக்கும் காவல்வெம் பூனைக்கும் தோழன்என் பார்.இதுவே (168) வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத் தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும் பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே - கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே. (179) தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப் பாலுண்ட செம்மணியைச் சிரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்