பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XV பாடல்களைப் படிப்பதுண்டு:1960 முதல் நாளிது வரை திருவ ருட்பாவிலும் அவர் கொள்கைகளிலும் என் ஈடுபாடு அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சில ஆண்டுகட்குமுன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வள்ளலார் அருளிச் செயல்களில் ஒரு கருத்தரங்கு நடத்தி மகிழ்ந்ததுண்டு. கடந்த ஓராண்டுக் காலமாக திருவருட்பாவில் அதிக ஈடுபாடு கொண்டு ஆழங்கால் பட்டதன் விளைவாக இந்த நூலும் உருவாயிற்று. வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் வள்ளல் பெருமானின் கொள்கையைக் கடைப்பிடிக் கும் ஊழும் இருந்தது அப்பெருமான் ஆசி எனக் கருதுகின்றேன். என் வாழ்நாளின் இறுதிக் காலப் பகுதியில் (அகவை 88) இந்த நூல் எழுதுவதற்குரிய சிந்தனையும், எழுதுங்கால் நல்ல உடல்நிலையையும் கண்ணொளியையும் நல்கிவரும் என்னுளே நிலையாக எழுந்தருளியிருக்கும் பரம்பொருளை வாழ்த்தி வணங்கி அமைகின்றேன். புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம். புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே கரிசெலாம் தவிர்த்து களிப்பெலாம் அடைந்து கருத்தொடு வாழவும் கருத்தில் துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்ககம் துலங்கவும் திருவருட் சோதிப் பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே!" - வள்ளல் பெருமான் வேங்கடம்’ - AD-13, அண்ணாநகர் ந.சுப்புரெட்டியார் சென்னை - 600 04 0. தொலைபேசி: 26211583 3. கடந்த பத்தாண்டுகளாக உதவும் கரங்கள் நிறுவனத்தின் ஆதரவில் உள்ள 100 அனாதைப் பிள்ளைகளுக்கு என் பிறந்த நாள் நினைவாக (ஆகஸ்டு 27) ஆயிரம் ரூபாய் அளித்து அன்றைய காலை உணவில் செலவிடுமாறு ஏற்பாடு செய்து வருகின்றேன். (சீவகாருண்ய கொள்கை கடைப்பிடிப்பு) 4. திருவருட்பா - 8-ஆம் திருமுறை - சிவ புண்ணியப் பேறு - 8