பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 岑 157 露 கோதிலா தோங்கு மருந்து - அன்பர் கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து மாதொரு பாக மருந்து - என்னை வாழ்வித்த என்கண் மணியா மருந்து நல்ல (15) கோமளங் கூடு மருந்து - நலங் . கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து நாமள வாத மருந்து - நம்மை நாமறி யும்படி நண்ணு மருந்து நல்ல (17) பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட் பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம் வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து நல்ல (20) மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை மறவாதவருள் வழங்கு மருந்து இறந்தா லெழுப்பு மருந்து - எனக் கென்றுந் துணையாயிருக்கு மருந்து நல்ல (28) மூவர்க் கரிய மருந்து - செல்வ முத்துக் குமாரனை யீன்ற மருந்து நாவிற் கினிய மருந்து - தையல் நாயகிக் கண்டு தழுவு மருந்து நல்ல (29) நல்ல மருந்திம்மருந்து - சுகம் நல்கும் வைத்திய நாத மருந்து உலகிலுள்ள மருந்து வகைகள் யாவும் உடலில் நேரிடும் பிணிகளை எல்லாம் தீர்க்கும். சில பிணிகளைத் தீர்க்காமலும் போகலாம். ஆனால், அம்பலத்தாடும் அருமருந்து, அடிகளாரின் கருத்துப்படி பிறவிப் பிணி யைத் தீர்க்கும் மருந்தாகும்; தப்பாமல் தீர்க்கும் மருந்து மாகும்.