பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

裘 158 零 இராமலிங்க அடிகள் 10. திருவாரூர்ப் பதிகம்: சோழ நாட்டுச் சிவத்தலங்க ளுள் ஒன்று; மிகு புகழ் வாய்ந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறந்தது. இங்குள்ள தியாகராசர் சந்நிதி புகழ் வாய்ந்தது. ஆரூர் அண்ணல் சுந்தரருக்கு உதவிய செயல்கள் மிகு புகழ் வாய்ந்தவை. திருமுறை களில் மிகுதியான பாசுரங்கள் இத்திருத்தலத்திற்கே உண்டு. இத்தலத்தின்மீது அடிகளார் பாடியுள்ள பதிகம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. சில பாடல் களில் ஆழங்கால் படுவோம். தண்ணார் மதிபோல் சிதள வெண் தரளக் கவிகைத் தனிநிழற்கீழ்க் கண்ணார் செல்வச் செருக்கிளர்தம் களிப்பில் சிறிய கடைநாயேன் பெண்ணார் பாகப் பெருந்தகைதன் பெரிய கருனைக் குரியம்என்றே எண்ணா நின்று களிக்கின்றேன் ஆரூர் எந்தாய் இரங்காயே. (1) மணியார் கண்டத்து எண்தோள்செவ் வண்ணப் பவள மாமலையே அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன் தனியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன். திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே. (3) கருணைக் கடலே திருஆரூர்க் கடவுட் சுடரே நின்னுடைய அருணக் கமல மலரடிக்கே - அடிமை விழைந்தேன் அருளயேல்