பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岑 160 零 இராமலிங்க அடிகள் தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச் சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே. (3) என்பது மூன்றாம் பாடல். 13. பழமலைப் பதிகம். இது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பாலான பத்துப் பாடல்களைக் கொண்டது. பழமலை - விருத்தாசலம். பாடல்கள் யாவும் 'கண்டேனே' என்று முடிகின்றன. சில பாடல் களில் ஆழங்கால் படுவோம். திருமால் கமலத் திருக்கண்மலர் திகழு மலர்த்தாட் சிவக்கொழுந்தைக் கருமா லகற்றும் தனிமருந்தைக் கனக சபையிற் கலந்தஒன்றை அருமா மணியை ஆரமுதை அன்பை அறிவை அருட்பெருக்கைக் குருமா மலையைப் பழமலையிற் குலவி யோங்கக் கண்டேனே (1) வான நடுவே வயங்குகின்ற மவுன மதியை மதிஅமுதைத் தேனை அளித்த பழச்சுவையைத் தெய்வ மணியைச் சிவபதத்தை ஊனம் அறியார் உளத்தொளிரும் ஒளியை ஒளிக்கும் ஒருபொருளை ஞான மலையைப் பழமலைமேல் நண்ணி விளங்கக் கண்டேனே. (2) இளைத்த இடத்தில் உதவிஅன்பர் இடத்தே இருந்த ஏமவைப்பை