பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 笨 61 漆 வளைத்த மதின்மூன் றெரித்தருளை வளர்த்த கருணை வாரிதியைத் திளைத்த யோகர் உளத்தோங்கித் திகழும் துரியா தீதமட்டுங் கிளைத்த மலையைப் பழமலையிற் கிளர்ந்து வயங்கக் கண்டேனே! (4) கருணைக் கடலை அக்கடலிற் கலந்த அமுதை அவ்வமுதத் தருனச் சுவையை அச்சுவையிற் சார்ந்த பயனைத் தனிச்சுகத்தை வருணப் பவளப் பெருமலையை மலையிற் பச்சை மருந்தொருபால் பொருனச் சுறவே பழமலையிற் பொருந்தி யோங்கக் கண்டேனே. (7) நல்ல மனத்தே தித்திக்க நண்ணும் கனியை நலம்புரிந்தென் அல்லல் அகற்றும் பெருவாழ்வை அன்பால் இயன்ற அருமருந்தைச் சொல்ல முடியாத் தனிச்சுகத்தைத் துரிய நடுவே தோன்றுகின்ற வல்ல மலையைப் பழமலையில் வயங்கி யோங்கக் கண்டேனே. (9) பாடல்களை ஈடுபட்டுப் பாடி அநுபவிக்கும் பொழுது பக்திச் சுவை ததும்பும்; அடிகளாரின் மனத்து டன் ஒன்றி வாழும் நிலையை எய்தவும் முடியும். 14. பழமலையோ கிழமலையோ இத்தலைப்பின் கீழ் இரண்டு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்க ளும், ஒரு நேரிசை வெண்பாவும் அடக்கம். இராம.-12