பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 苯 65 泰 'சிங்கபுரிதனில் அமர்ந்த தெய்வக் குன்றே என இறு கின்றன. பொன்மகள்வாழ் சிங்கபுரி போதன்.அறு மாமுகன்மேல், நன்மைமிகு செந்தமிழ்ப்பா நாம்உரைக்கச் - சின்மயத்தின் மெய்வடிவாம் நங்குருதாள் வேழமுகன் தன்னிருதாள் பொய்அகலப் போற்றும்இப் போது (1) இது தம்பியைப் பாட அண்ணனை - வேழமுகத்தானை - உதவுமாறு வேண்டுவது. காப்பாக அமைந்திருப்பது. கந்தவேளைப் பற்றிய சில பாடல்களில் ஆழங்கால் படுவோம். உம்பர்துயர் கயில்ைஅரற் கோதிடவே அப்பொழுதே உவந்து நாதன் தம்பொருவில் முகமாறு கொண்டுதுதல் ஈன்றபொறி சரவ ணத்தில் நம்புமவர் உயவிடுத்து வந்தருளும் நம்குகனே நலிவு தீர்ப்பாய் திங்கள்தவழ் மதிகுழும் சிங்கபுரி தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. (3) வானவர்கோன் மேனாளில் தரமறியா நிகழ்ந்துவிட விரைவில் சென்று மானமதில் வீற்றிருந்தே அவன்புரிந்த கொடுமைதனை மாற்றும் எங்கள் தானவர்தம் குலம்அடர்த்த சண்முகனே இப்பிணியைத் தணிப்பாய் வாசத் தேனவிழும் பொழில்குழும் சிங்கபுரி, தனில்அமர்ந்த தெய்வக் குன்றே. (6) முன்செய்த மாதவத்தால் அருணகிரி நாதர்முன்னே முறையிட் டேத்தும் புன்செயல்தீர் திருப்புகழை ஏற்றருளும் மெய்ஞ்ஞான் புனிதன் என்றே