பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 露 171 藻、 25. கணேச தனித்திரு மாலை: இதில் ஆறு பாடல்கள் அடக்கம். அறுசீர்க் கழிநெடி ஆசிரிய விருத்தம், கலி வண்ணத்துறை, எழுசீர்க் கழிநெடி ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை என்ற நான்குவகை யாப்பு களால் அமைந்து ஒரு 'கதம்ப மாலை'யாகக் காட்சி யளிக்கின்றது. நான்கு பாடல்களில் ஆழங்கால் படு வோம். . திங்கள்.அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி மங்கைவல் லயைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி ஐய்ங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி (1) இஃது அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - ஒரே பாடல். அடியார் உள்ளம் தித்தித் துறும் அமுதென்கோ கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள்என்கோ அடிகேள் சித்தி விநாயக என்என் றறைகேனே (3) இஃது கலிவண்ணத் துறை'யில் அமைந்த இரண்டு பாடல்களில் இரண்டாவது. கமலமலர் அயன்நயனன் முதல்அமரர் இதயம்.உறு கரிசகல அருள்செய்பசு பதியாம்