பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

矮 氮了2 德 இராமலிங்க அடிகள் நிமலநிறை மதியின்ஒளிர் நிரதிசய பரமசுக நிலையை அருள் புரியும்அதி பதியாம் விமலபிர னவவடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம் அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபயனினும் எமது கன பதியே (4) இஃது எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தது. சந்தக் குழிப்புடன் திகழ்வதாகக் காணப்ப டுகின்றது - ஒரே பாடல். அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம்துக் கம்பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ வம்பொன்று பூங்குழல் வல்லயை யோடு வயங்கியவெண் கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண் டருளிய குஞ்சரமே (5) திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த இருமாதவர்தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக் குருமா மலர்ப்பிறை வேணியு முக்கனும் கூறுமைந்து வருமா முகமுங்கொள் வல்லயை பாகனை வாழ்த்துதுமே (6) இவை இரண்டும் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தவை. ஒரு குறிப்பு: அடிகளார் விநாயகப் பெருமான்மீது அளவு கடந்த பக்தியுடையவராதலால், நாலு பதிகங்கள் பாடி அப்பெருமானைப் போற்றுகின்றார். செட்டிநாட் டுப் பிள்ளையார்பட்டி விநாயகர் மிகுபுகழ் வாய்ந்தவர்.