பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 崇 173 蔷 சிறுத் தொண்டர் போன்ற அடியார்கள் கடத்திச் சென்று விடுவார்கள்’ என்ற அச்சத்தால் இங்கு இப்பெருமான் பாறையில் செதுக்கப் பெற்றுத் திகழ்கின்றார். நகரத்தார் பெருமக்களுக்கு இது குலதெய்வம். தவிர, அவர்தம் ஒன்பது கோயில்களைச் சேர்ந்தவர்களும் பிள்ளையார் கோயிலாகவே அமைந்துள்ளமை இதனை வலியுறுத் தும். வைணவர்களும் கணநாதரைத் தும்பிக்கையாழ் வார்’ என்று போற்றி வழிபடுகின்றனர். 27. மங்களம்: இது இத்திருமுறையின் இறுதிப் பதிகமாக அமைந்துள்ளது. சிந்துப் பாடலாகத் திகழ்கின் றது. அடிகளார் திருமுறைகளில் 'சிந்தும் 'கும்மியும்’ (கொம்மி என்று அடிகளாரால் குறிக்கப் பெறுவது) இடம்பெற்றுள்ளன. மங்களத்தில் 7 பாடல்கள் அமைந் துள்ளன. புங்கவர் புகழுமா தங்கமு கந்திகழ் எங்கள் கணேசராந் துங்கற்கு - மங்களம் (1) போதந் திகழ்கபர நாதந் தனில்நின்ற நீதராஞ் சண்முக நாதற்கு - மங்களம் (2) பூசைசெய் வாருளம் ஆசைசெய் வார்தில்லை ஈசர் எமதுநட ராசற்கு - மங்களம் (3) பூமி புகழ்குரு சாமி தனைான்ற வாமி எனும்சிவ காமிக்கு - மங்களம் (4) புங்கமி குஞ்செல்வந் துங்கமு றத்தரும் செங்க மலத்திரு மங்கைக்கு - மங்களம் (5) பூணி லங்குந்தன வாணி பரம்பர வாணி கலைஞர்கொள் வாணிக்கு - மங்களம் (6) புண்ணிய ராகிய கண்ணிய ராய்த்தவம் பண்ணிய பத்தர்க்கு முத்தர்க்கு - மங்களம் (7)