பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் அப்பாநின் பொன்அருள் என்மேல் தயைசெய் தளித்திலையேல் துப்பா னவும்ஒரு போதுதுவ் வாது சுழன்றனையே இப்பாரில் ஈசன் திருவருள் நீபெற்ற தெங்ங்னமோ செப்பாய் எனவரிப் பார்சிரிப் பார்இச் செகத்தவரே (2) எண்ணாமல் நாயடி யேன்செய்த குற்றங்கள் யாவும்எண்ணி அண்ணாநின் சித்தம் இரங்காய் எனில்இங் கயலவர்தாம் பெண்ஆர் இடத்தவன் பேரருள் சற்றும் பெறாதநினக்கு ஒண்ணாதிவ் வண்மை விரதம்என் றால்என் உரைப்பதுவே (5) பொய்யான வஞ்சக னேன்.பிழை யாவும் பொறுத்துனருள் செய்யாய் எனில்எது செய்குவன் யான்இச் செகதலத்தோர் எய்யா விரதத்தில் யாதுபெற் றாய்என் றிகழ்வர்கண்டாய் அய்யாஎன் இன்அமு தேஅர சேஎன தாண்டவனே. (6) ஆசும் படியில் அகங்கா ரமும் உடை யான்என்றெண்ணாப் பேசும் படியில் எனக்கரு ளாய்எனில் பேருலகோர் ஏசும் படிவரும் பொய்வேடன் என்றதை எண்ணிஎண்ணிக் இராம. - 13 笨 177 零