பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் 参 179 涂 என்பன இப்பதிகத்தின் நான்கு பாடல்கள். வள்ளலார் அப்பழுக்கற்ற அருளாளர் என்பதை நாம் அறிவோம். ஆயினும் நம் குறைகளை நினைந்து கொண்டு நாம் அழுது வேண்டினால் நமக்கு இறைவன் அருள்கிட்டும் என நம்பி அமைவோம். 10. அபராத விண்ணப்பம்: இப்பதிகம் இருபத்தி ரண்டு பாடல்களைக் கொண்டது. பாடல்கள் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. இறைவனே தமக்குக் கதி என்ற நினைவுடையவர் அடிகள். தமக்கு அறிவையும் பணிவையும் நல்கியவர் எனினும், தாம் அறியாப் பிழைகள் புரிந்திருக்கலாம். அவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மன்னித்து அருளுமாறு விண்ணப்பிக்கும் போக்கில் அமைந்தவை பாடல்கள். ஒரு சிலவற்றில் ஆழங்கால் படுவோம். அன்றோர் பொருளாய் அடியேனை ஆட்கொண் டருளி அறிவளித்தாய் இன்றோ சிறியேன் பிழைகருதி இரங்கா தகற்ற எண்ணுதியோ குன்றோர் அனைய குறைசெயினும் கொண்டு குலம்பே சுதல்எந்தாய் நன்றோ கருனைப் பெருங்கடலே ஆனாய் இந்த நாயினையே (2) பெரும்பாலும் அருளாளர்கள் தம்மைக் கடையேனாகக் கருதித் தாழ்த்திக் கொள்ளுதல் மரபாக இருந்து வருவ தைக் காண்கிறோம். இதனை வைணவ ஆசிரியர்கள் நைச்சியாதுசந்தானம் என்று பேசுவர். அத்தகைய போக்கு அவர்தம் பாடலில் அமைந்திருப்பதைக் காண லாம். இங்கும் பாடல்கள் யாவும் அப்போக்கிலேயே அமைந்திருப்பவை.