பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

零 2 箏 இராமலிங்க அடிகள் வனருளால் 5.10.1823இல் ஐந்தாவது மகனாக ஒரு குழந்தை பிறந்தது; அதற்குப் பெற்றோர் இராமலிங்கம் எனப் பிள்ளைத் திருநாமம் சாற்றினர். ஐந்து திங்கள் குழவியுடன் பெற்றோர் ஆடலரசன் வழிபாட்டிற்குச் சிதம்பரம் சென்றனர். அப்போது அடி கட்கு சிதம்பர ரகசியம் தரிசனமாயிற்று. தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத் தலத்திடையே திரைதுரக்கத் தரிசித்த போது வேய்வகைமேல் காட்டாத என்றனக்கே எல்லாம் வெளியாகக் காட்டியான் மெய்உறவாம் பொருளே - அருள்விளக்க மாலை - 44 என்ற பாடற்பகுதி அகச்சான்றாக அமைகின்றது. இன் றும் பல அகச்சான்றுகளும் உள்ளன. விட்ட குறை தொட்ட குறையை நிறைவேற்றற்கென்றே பிறந்தவர் என்பதை 'கட்டவிழ்த்த கமலம் என (சிவதரிசனம் - 9) என்ற பாடலாலும் அறியலாம். இந்நிலையில் இராமலிங்கத்தின் எட்டாந் திங்களில் இராமைய பிள்ளை காலமாகவே குடும்பம் பொன்னே ரிக்குச் சென்றது. ஒரிரு ஆண்டுகளில் அங்கு வசித்து சின்னம்மையார் சென்னைக்குக் குடியேறினார். இதிலி ருந்து சென்னை வாழ்க்கை தொடங்குகிறது. இதனைச் சில பகுதிகளாகப் பிரித்து நோக்கலாம். - 1. கந்தகோட்ட பகுதி (1823-1835): அடிகளாளரின் அகவைக் காலத்தில் (1-12) நடைபெற்ற நிகழ்ச்சிகள். (1) அடிகளாரின் அகவை மூன்று அல்லது நான்கில் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தபொழுது திண் ணையிலிருந்து நழுவி விழுந்த பொழுது, கீழே விழா மல் ஒருவரால் காக்கப் பெற்றார். ஓங்கியஓர் துணையின்றிப் பாதிஇர வதிலே உயர்ந்தஒட்டுத் திண்ணையிலே படுத்தகடைச் சிறியேன்