பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் $ 189 缘 மருவே மலரே சிவகாம வல்லி மணியே வந்தருளே (3) தருவாய் இதுநல் தருணங்கண் டாய்என்னைத் தாங்கிக்கொண்ட குருவாய் விளங்கு மணிமன்ற வானனைக் கூடிஇன்ப உருவாய்என் உள்ளத்தின் உள்ளே அமர்ந்துள்ள உண்மைஎலாம் திருவாய் மலர்ந்த சிவகாம வல்லிநின் சீர்அருளே (5) இங்கு மூன்று வகை யாப்பில் காட்டிய மூன்று பாடல்களையும் மனங்கரைந்து அழுது பாடி சிவகாம வல்லித் தாயாரை அடிகள் அநுபவிப்பதைப்போல் நாமும் அநுபவிப்போம்; அன்னையின் திருவருளை யும் பெறுவோம். பாடல்களின் பண்புகள்: முதல் ஏழு திருமுறை ஆசிரி யர்கள் தலங்கள்தோறும் சென்று ஆங்கு எழுந்தருளி யிருக்கும் மூர்த்திகளின் முன்னால் நின்று தாம் கருதிய திட்டப்படிப் பதிகம் (10, 11 பாடல்கள்) பாடி வந்தார் கள். பாடல்களும் ஒவ்வொரு வகை சந்தத்தில் அமைந் தன. பாடல்களின் எண்ணிக்கையும் மாறுவதில்லை; ஒவ்வொரு பதிகமும் ஒரே வகை சந்தத்திலேயே அமைந்திருக்கும். ஆனால் வள்ளல் பெருமான் சில தலங்களைத்தாம் வழிபட்டார் - சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்ததற் கேற்ப, மூர்த்திகள்முன் நின்று அருளால் பாடுவதில்லை. தாம் தங்குமிடத்தில் தியான நேரங்கள் தவிர, மீதி நேரங்களில் எம்பெருமான்களை நீள நினைந்து பாடு வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சில பதிகங்கள் திட்டப்படி 10, 11 பாடல்களால் அமைந்தன. ஏனைய