பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந் திருமுறைப் பாடல்கள் 豪 193 象 நாடும் படிநன் கருளுமென்றேன் நங்காய் முன்பின் ஒன்றேயாய் ஈடுந் தியபன் னடுவுளதால் என்றார் தோழி இவர்வாழி (3) என்பது மூன்றாவது பாடல். குறிப்பு: ஆடும் இடம் - நடனம் செய்யும் இடம்; பாடும் - வேதாகமங்களால் புகழப்படும்; திருவும் பொன் என்னும் சொல்லும்; சவுந்தரமும் - அழகு, அழகுக்குப் பிரதிபதமாகிய அம் என்னும் சொல்லும்; பழமும் - (பழம் = பலம் வடமொழி) - பலம் என்னும் சொல்லும் சேர்ந்தால் பொன்னம்பலம் என்றாகின்றது. முன்பின் ஒன்றேயாய் - முன்னும் பின்னும் ஒரு சொல்லாகிய அம். பல் நடுவுளது - பல் என்னும் சொல் நடுவுளது. அம்+பல்+அம் = அம்பலம். இந்த மூன்று பாடல்களும் மும்மணிகள்; முக்கனி கள். நினைந்து நினைந்து சுவைத்து இன்புறத்தக்கவை. 26. பாங்கிமார் கண்ணி: இதில் உள்ளவை யாவும் சிந்துப் பாடல்கள். சாதாரண மக்களிடம் நடமாடத் தகுந்தவை. தோழி ஒருத்தி தன் நண்பர் தோழிகளை விளித்துப் பாடும் பாங்கில் அமைந்தவை. இதில் 27 கண்ணிகள் அடக்கம். தில்லைச் சிற்றம்பலவனின் கூத்தை அநுபவித்து மகிழ்ந்து உள்ள பாங்கில் அமைந் தவை. சிலவற்றை நோக்குவோம். அம்பலத்தில் ஆடுகின்றார் பாங்கிமா ரே-அவர் ஆட்டங்கண்டு நாட்டங் கொண்டேன் பாங்கிமா ரே (1) ஆடுகின்ற சேவடிமேல் பாங்கிமா ரே-மிக ஆசைகொண்டு வாடுகின்றேன் பாங்கிமா ரே (2) இராம.-14