பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

苓 ±98 案 இராமலிங்க அடிகள் அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங் கதுபவ மாகின்ற தென்னடி தாயே செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் திருவருள் உருவம்என்றறியாயோ மகளே (3) அடிகளார் அம்பல்வனின் திருக்கூடத்தைப் பல் வேறு விதமாக அநுபவிக்கும் பாங்கு நம்மை வியக்க வைக்கின்றது. நம்மிடமும் அவ்வித உணர்வு எழச் செய்கின்றது. 36. நற்றாய் கவன்றது. நற்றாய் - ஈன்றதாய். இவள் தன் மகள் தில்லைத் திருக்கூத்தனை நினைந்து நைவதாக உள்ள நிலையை எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத் தத்தாலமைந்த ஒன்பது பாடல்களால் உரைப்பது, இப் பகுதி. சில பாடல்களில் ஆழங்கால்படுவோம். திருஅருட் புனிதை மகிழநின் றாடும் தில்லைமன் றழகனே என்பாள் மருவருட் கடலே மாணிக்க மலையே மதிச்சடை வள்ளலே என்பாள் இருவருக் கரிய ஒருவனே எனக்கிங் கியார்துணை நின்னலா தென்பாள் வெருவிஉட் குழைவாள் விழிகள்ை துளிப்பாள் வெய்துயிர்ப் பாள்ளன்றன் மின்னே (1) உலகெலாம் தழைப்பப் பொதுவினில் ஓங்கும் ஒருதனித் தெய்வம்என் கின்றாள் இலகுபேரின்ப வாரிஎன் கின்றாள் என்னுயிர்க் கிறைவன்என் கின்றாள் அலகிலாக் கருனை அமுதன்என் கின்றாள் அன்பர்கட் கன்பன்என் கின்றாள் திலகவா ணுதளாள் இவ்வணம் புலம்பித் தியக்கமுற் றழுங்குகின் றாளே (3)