பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱 200 宗 இராமலிங்க அடிகள் ளைப் பாடி அநுபவித்தால் வள்ளல் பெருமான் தில்லை அம்பலவன்மீது கொண்டுள்ள பக்தி நிலைகளை உணர லாம். . 37. சல்லாப லகரி: இதிலுள்ள இரு பாடல்களும் கலிச்சந்த விருத்தம் என்று தொழுவூர் வேலாயுத முதலி யாரும், கலிநிலைத் துறை என்று ஆ.பாலகிருஷ்ண பிள்ளையும் குறித்துள்ளனர். அடிகள் பெண் நிலையிலி ருந்து கொண்டு நடராசப் பெருமானைச் சந்தித்தாகவும் அடிகள் வந்தனம்’ என்று சொல்ல அதற்கு அவர் 'அந்தனம் இலநம் வாழ்வெல்லாம் அந்தரம் என்று முதற் பாடலும், இரண்டாம் பாடல் எம்பல மாவீர் எம்பெருமுன் நீரே என்று அடிகள் சொல்ல அதற்கு அவர் 'எம்முடை இன்ப வாழ்வெல்லாம் அம்பலம்’ என்று சொல்லுமாறும் நடைபெறுகின்றன. ஆதலால் இவை சல்லாப லகிரி என்ற தலைப்பின்கீழ் அமைந் துள்ளன. . - (38) தலைமகளின் முன்ன முடிவு: பத்துப் பாடல் களைக் கொண்ட பதிகம் இது. பாடல்கள் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. தலைமகளின் நிலையில் இருந்து கொண்டு அடிகள் தம் பிழைகளையெல்லாம் பொறுத்தருளுமாறு வேண்டுவ தாகப் பாடல்கள் நடைபெறுகின்றன. ஒருசில பாடல்க ளில் ஆழங்கால் படுவோம். . . . . . . . வெறுத்துரைத்தேன் பிழைகள்எலாம் பொறுத்தருளல் வேண்டும் விளங்கறிவுக் கறிவாகி மெய்ப்பொதுவில் நடிப்போய் கறுத்துரைத்தார் தமக்கும்அருள் கனிந்துரைக்கும் பெரிய கருணைநெடுங் கடலேமுக் கண்ணோங்கு கரும்பே மறுத்துரைப்ப தேவன்அருள்நீ வழங்கினும் அன்றி மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பறியேன் செறுத்துரைத்த உரைகளெலாம் திருவருளே என்று. சிந்திப்பதல்லாமல் செய்வகைஒன்றிலனே (1)