பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந்திருமுறைப் பாடல்கள் 常 201 崇 மிகுத்துரைத்தேன் பிழைகள்எலாம் சகித்தருளல் வேண்டும் மெய்யறிவின் புருவாகி வியன்பொதுவில் நடிப்போய் தொகுத்துரைத்த மறைகளும்பின் விரித்துரைத்தும் காணாத் துரியநடு வேஇருந்த பெரியபரம் பொருளே - பகுத்துரைத்த பயன்உரைக்கோர் பொருளாகி விளங்கும் பரஞ்சுடரே பரம்பரனே, பசுபதியே அடியேன் வகுத்துரைப்ப தெவன்அருள்நீ வழங்குகினும் அன்றி மறுத்திடினும் உன்னையலால் மற்றொருசார் பிலனே (2) என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன். என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட்டிடுவேன் அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய் அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய் மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே (6) நாயகரே உமதுவசம் நான் இருக்கின்றதுபோல் நாடியதத் துவத்தோழி நங்கையர்என் வசத்தே மேயவர்ஆ காமையினால் அவர்மேல்அங் கெழுந்த வெகுளியினால் சிலபுகன்றேன் வேறுநினைத் தறியேன் தூயவரே வெறுப்புவரில் விதிவெறுக்க என்றார் குழவிதித் தாரைவெறுத் திடுதல்அவர் துணிவே தீயவர்ஆ யினும்குற்றம் குறியாது புகன்றால் 1: . திமொழிஅன் றெனத்தேவர் செப்பியதும் உளதே (9 குற்றம்.ஒரு சிறிதெனினும் குறித்தறியேன் வேறோர் குறைஅதனால் சிலபுகன்றேன் குறித்தறியேன் மீட்டும் சற்றுமணம் வேறுபட்ட தில்லைகண்டீர் எனது சாமிஉம்மேல் ஆணைஒரு சதுரும்நினைத் தறியேன் பெற்றவளும் உற்றவரும் சுற்றமும்நீர் என்றே பிடித்திருக்கின் றேன்பிறிதோர் வெடிப்பும்உரைத் தறியேன்