பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காந்திருமுறைப் பாடல்கள் 岑 203 球 இனித்தசுகம் அறிந்துகொள இளம்பருவந் தனிலே என்புருவ நடுஇருந்தான் பின்புகண்டேன் இல்லை அனித்தம்,இலா இச்சரிதம் யார்க்குரைப்பேன் அந்தோ அவன்அறிவான் நான்அறிவேன் அயலறியார் உளரோ துணித்தநிலை விடுத்தொருகால் சுத்தநிலை அதனில் சுகங்கண்டும் விடுவேனோ சொல்லாய்என் தோழி (10) இக்கொத்தில் ஒரு பாடலைக் கூட விட மனம் இல்லை. விரிவஞ்சி விடுத்தேன். அடிகளின் அடியார் கள் அனைத்திலும் ஆழங்கால்பட்டு அநுபவிக்க வேண் டும் என்பது என் ஆசை. அப்படிச் செய்தால் அடிக ளின் ஆராக்காதல் நம்மையும் தொத்து நோய் போல் விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொள்ளும்.