பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் இதில் 12 மாலைகளும், 238 பாடல்களும் அடக்கம். திருமுறைகள் ஆறிலும் இதுதான் மிகச் சிறி யது; குறைந்த பதிகங்கள்; குறைவான எண்ணிக்கை யில் பாடல்கள். ‘மாலைகள் என்ற தலைப்புகள் 12 மாலைகளைக் கொண்டவை. இவற்றையும் இவற்றில் மனங்கவரும் சில பாடல்களையும் காண்போம். 1. அன்பு மாலை: இஃது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பால் அமைந்த 31 பாடல்களைக் கொண்டது. உள்ளத்தைக் கவரும் ஒரு சில பாடல்களில் ஆழங்கால் பட்டுத் துய்ப்போம். 'அன்பே சிவம் என் பது திருமூலர் வாக்காதலால் 'அன்பு மாலை முதலாவ தாக இத்திருமுறையில் அமைக்கப் பெற்றதுபோலும் எனக கருதலாம. அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே வேதஆ கமமுடிவின் விளங்கும்ஒளி விளக்கே பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன் பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது நானே (1) ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய் ஆக்கிஅருண் மனத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்