பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 涂 205 濠 மாண்பனைமிக் குவந்தளித்த மாகருணை மலையே வருத்தமெலாம் தவிர்த்தெனக்கு வாழ்வளித்த வாழ்வே நாண்பனையும் தந்தையும்என் நற்குருவும் ஆகி நாயடியேன் உள்ளத்து நண்ணியநாயகனே வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும் விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்.அன்றி இலையே (3) திருநெறிசேர் மெய்அடியார் திறன்ஒன்றும் அறியேன் செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன் கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினும் கடையேன் கற்கின்றேன் சாகாத கல்விநிலை கானேன் பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்தநிலை பெறுவான் பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே மன்னுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே (7) பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும் காணாத காட்சியெலாம் காட்டிஎனக் குள்ளே கருணைநடம் புரிகின்ற கருணையைான் புகல்வேன் மாணாத குணக்கொடியேன் இதைநினைக்கும் தோறும் மனமுருகி இழுகண்ணர் வடிக்கின்றேன் கண்டாய் ஏனாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன் எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்த் தேனே. (9) அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே என்பருவம் குறியாமல் என்னைவலிந் தாட்கொண் டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும் முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே (11)