பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாம் திருமுறைப் பாடல்கள் 崇 2O7 岑 பாடல்களை ஆனந்தமாகப் பாடி அநுபவிக்க வேண்டும். பாட்டிலுள்ள உருவகங்கள் நம்மைக் கற் பனையில் ஆழ்த்தி அடிகளார் குறிப்பிடும் அன்புரு 领县鹅TL廷_具 ஆண்டவனை மானசீகமாகக் ö擅rö了 வழியமையும். 2. அருட்பிரகாச மாலை: அருள் என்னும் அன்பு ஈன் குழவி (குறள் - 757) என்றார் வள்ளுவர் பெரு மான். அந்த அருள் வடிவமான ஆண்டவனை அடிக ளார் 100 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பாடல்களால் வழுத்தி அவனை 'அருட்பிரகாசமாகக் காட்டுகின்றார் நமக்கு. இந்தப் பாமாலை அடிகளாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை உணர்த்துவதுபோல் தோன்றுகிறது. ஒரு சில பாடல்க ளில் ஆழங்கால்பட்டு அந்த அருட்பெருஞ்சோதியை’ நாமும் காண முயல்வோம். கருங்குழி வாழ்க்கையில் ஒரு நாள் இறைவன் மானிடத் திருமேனி தாங்கி அடிகள் இருக்குமிடம் தேடி வந்து கதவைத் தட்டித் திறக்குமாறு கூற, அவரும் திறக்க, வந்த இறைவன் தன் திருவடிகளில் ஒன்றை வாயிற்படியின் அகத்தும் மற்றொன்றைப் புறத்தும் வைத்தவாறு சில இதவார்த்தைகளைச் சொல்லிச் சென் றார். இந்நிகழ்ச்சியை, உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் இன்பம் உறுகின்ற வெளிநிலையென்றுபயநிலை யாகி இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே இரவில்எளி யேன்.இருக்கும் இடந்தேடி அடைந்து கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து . களித்தெனையங்கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய் அலகில்அருட் கடலாம்உன் பெருமையை.என் என்பேன் ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநாயகனே (1) என்ற பாடலிலும் தொடர்ந்து வரும் பாடல்களிலும் குறித்தருளியுள்ளார்.