பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

矮 2篡4 岑 இராமலிங்க அடிகள் 7. அதிசய மாலை: இது பதினான்கு பாடல்களைக கொண்டது - சைவ சாத்திரங்கள் பதினான்கைப் போல. எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. இத்திருமுறையிலுள்ள பெரும்பாலான பதிகங்களும் (பன்னிரண்டில் மூன்றைத் தவிர) இந்த யாப்பில்தான் நடைபெறுகின்றன. சொற்பொழிவுக்கு ஏற்ற நடைபோல் இருப்பதால் பிற்காலத்தில் பாரதி தாசன் தம்முடைய முக்கியமான காவியங்களில் இந்த யாப்பையே காப்பாக அமைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். தவிர, எல்லாப் பாடல்களும் 'அதிசயம், அதிசயம்’ என்று ஈரடுக்குத் தொடர்களால் தொடங்கு வதே நமக்கும் அற்புத அதிசயமாகத் தோன்றுகின்றது. மேலும் பாடல்கள் யாவும் தனித்த சிவகாம வல்லிக் கினித்த நடத்தவளே என்று இறுவதும் ஒர் அதிசயமே. அச்சோாததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அரிமுதலோர் நெடுங்காலம் புரிமுதல்நீத் திருந்து நச்சோல மிடவும்அவர்க் கருளாமல் மருளால் நாள்கழித்துக் கோள்கொழிக்கும் நடைநாயிற் கடையேன் எச்சோடும் இழிவினுக்கொன் றில்லேன்நான் பொல்லேன் எனைக்கருதி யானிருக்கும் இடத்திலெழுந் தருளித் தச்சோதி வனப்பொருள்ஒன் றெனக்களித்துக் களித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே (2) அந்தோ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அறிவுடையார் ஜம்புலனும் செறிவுடையார் ஆகி வந்தோல மிடவும்.அவர்க் கருளாமல் மருளால் - மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன் எந்தோஎன்றுலகியம்ப விழிவழியே உழல்வேன் எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து சந்தோட முறஎனக்கும் தன்வனம் ஒன்றளித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே (4)